மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்தெரிவுத்துள்ளனர். கர்நாடகா நீர் திறக்க தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் சரிந்ததை அடுத்து நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது.