தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்க சட்ட நடவடிக்கை தொடரும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் பிற்பகலில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வரும் 11ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கூட்டம் நடத்துவது என்றும், தீா்மானிக்கப்பட்டது. கூட்டத்தை மேலும் சில நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
10ம் தேதியும், 11ம் தேதியும் சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல்கள் வருமாறு:
10-10-2023 (செவ்வாய்க்கிழமை)
2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (முதல்) மீது விவாதம்.
II. அரசினர் அலுவல்கள்.
11-10-2023 (புதன்கிழமை)
1. 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (முதல்) மீதான விவாதத்திற்குப் பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு.
11. 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (முதல்) குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு -அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி).
2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளுக்குரிய மிகைச் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளித்தல்.
IV. 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளுக்குரிய மிகைச் செலவுக்கான வாக்கெடுப்பு (விவாதமின்றி). மானியக் கோரிக்கைகள் மீது
V. 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளுக்குரிய மிகைச் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி).
VI.
ஏனைய
சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும்
நிறைவேற்றுதல்.
VII. ஏனைய அரசினர் அலுவல்கள்.