தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் சார்பில் சுய மரியாதை சுடரொளி கணேசன் நினைவாக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கபிஸ்தலம் மணி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 60 பேரிடமிருந்து இரத்தத்தை சேகரித்தனர். நிகழ்ச்சிக்கு பெரியார் சேவை மய்யத் தலைவர் குணசேகரன், கபிஸ்தலம் பெரியார் கல்வி சமூகப் பணி அறக் கட்டளை தலைமை அறங்காவலர் கலிய மூர்த்தி, மணி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி தாளாளர் கலிய மூர்த்தி, திராவிடர் சமுதாய நல கல்வி அறக் கட்டளை திருஞான சம்பந்தம் தலைமை வகித்தனர். முகாமை கும்பகோணம் ரத்த தான டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஷேக் தாவூது, பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம் தொடங்கி வைத்தனர். பாபநாசம் லயன்ஸ் சங்கம் ராஜா முகமது, திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் முபாரக் ஹூசைன், பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக் குலேசன் மேல் நிலைப் பள்ளி முதல்வர் தீபக் வாழ்த்தினர். பெரியார் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மோகன், குருதிக் கொடை முகாம் பொறுப்பாளர் விஜயராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.