திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியினை கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சிவகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர்
சக்திவேல், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் துணை மேலாளர்கள் தசங்கர் (வணிகம்) ரங்கராஜன், (பணியாளர் மற்றும் சட்டம்) கார்த்திகேயன், (தொழில்நுட்பம்) புகழேந்தி ( நகரம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.