சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற பெண்னை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண்குழந்தையும் 7வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி பப்பிதாவின் சகோதரர் மகளுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மணலி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் 1ம் தேதி நண்பர்களுடன் வீட்டில் குடித்துள்ளார். தந்தை வீட்டுக்கு சென்ற பபிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது பபிதா வீடு வீடாக இல்லாமல் இருந்ததை கண்டு, பபிதாவிற்கும் கணவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் பபிதாவை கழுத்தை நெரித்து மெத்தை மேலே தள்ளியுள்ளார். பின்னர் குழந்தைகள் 2 பேரும் தாயை எழுப்பியும் எழாததால் தந்தையிடம் குழந்தைகள் கூறவே தந்தை மூச்சற்ற நிலையில் இருந்த பபிதாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்தடாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். மேலும் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் காயங்களும் இருப்பதை கண்டு டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆர்கே நகர் போலிசார் நந்தகுமாரை போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பபிதாவுக்கு லோ பிபி இருந்ததாகவும் மயக்கம் போட்டு வீட்டில் இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து நத்தகுமார் கைது செய்து போலீஸ் ஸ்டேசனில் வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனையில் பபிதா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் குடித்து விட்டு வீட்டில் இருந்த போது மனைவி என்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் உன் கூட வாழ பிடிக்க வில்லை என்று கூறி படுக்கை அறையில் தூக்கிட்டு போவதை பார்த்து அந்த துணியால் கழுத்து நெரித்து பின்னர் மெத்தை மீது தள்ளியதாகவும் தெரிவித்தார். பின்னர் மனைவி கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கொலை வழக்கு பதிவு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.