தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது.பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தீயணைப்புத்துறை நிலைய அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு வந்து பேரணியை நிறைவு செய்தனர்
இதில் பெரம்பலூர் அரியலூர் தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் கோமதி, பெரம்பலூர் தீயணைப்புத்துறை நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு உள்ளிட்ட தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.