Skip to content
Home » பெரியாருக்கு நிகராக பெண்ணுரிமை போராளி இதுவரை வேறு எவருமில்லை – திருச்சியில் எம்பி கனிமொழி …

பெரியாருக்கு நிகராக பெண்ணுரிமை போராளி இதுவரை வேறு எவருமில்லை – திருச்சியில் எம்பி கனிமொழி …

  • by Authour

திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி & திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில்,கனிமொழி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எம்பி கனிமொழி பேசியதாவது…. 

மகளிர் சுய உதவி குழு, பெண் உயர் கல்வி பயில 1000 ரூபாய், மகளிர் விலையில்லா பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு பார்த்துப் பார்த்து தந்தது திமுக.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதிகளை மறுவரை செய்யப்பட்ட பின்பே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைப் படுத்தப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு.

தென் மாநிலங்களில் பெரும்பாலான குடும்பங்களில் நாம் இருவர் நமக்கு இருவர் (அ) ஒருவர் என்ற முறையை பின்பற்றுகிறோம். ஆகவே கல்வியிலும், வளர்ச்சியிலும் முன்னேறி, மக்கள் தொகை அளவில் குறைந்துள்ளோம். வடமாநிலங்களில் இதெல்லாம் கிடையாது. அங்கு மக்கள் தொகை அதிகம். கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுக்க நடத்தி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றே தெரியாது. இதை காரணமாக வைத்து வடமாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளை அதிகரிக்க திட்டமிடுகிறது பாஜக அரசு  என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *