தென்திருப்பதி என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் பல மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யாததால்
பக்தர்கள் கடும் வெயிலில் குழந்தைகளுடன் பல மணி நேரம் காத்திருந்தனர் மேலும் பக்தர்கள் குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லாத சூழ்நிலை ஒரு இடத்தில் மட்டும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் வரிசையில் நின்ற பல பக்தர்கள் குடிநீர் இல்லாமல் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து தனியார் திருமண கூட்டத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.