அரசு அறிவித்த நிவாரணம் போதாது;குறுவையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்; நாகையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஆவேசம்;
தண்ணீர் இன்றி கருகிய குறுவை நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை சாகுபடியினை காப்பீடு திட்டத்தில் சேர்க்காமல் காலந்தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்தும் இன்று நாகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசு கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், முந்தைய அதிமுக ஆட்சியில் குறுவைக்கு இன்சூரன்ஸ் அமல்படுத்தியதாகவும், ஆனால் தற்போதைய திமுக அரசு அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதால், விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அரசு அறிவித்த ஹெக்டேர் ஒன்றுக்கு 13500,ரூபாய் போதாது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 800 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவ்வாறு பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடுப்போம் என முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்தார்.