புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (Actu) காவல் உதவி ஆய்வாளர் கே.வைரம் மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. சோலைமுத்து ஆகியோரால் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்- புதுப்பட்டி அரசினர் பெண்கள் மேல்
நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், உதவி எண்கள் 181, 1098 குறித்தும் மற்றும் சைபர் கிரைம்(1930) குற்றங்கள் குறித்தும் பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. நிர்மலா மற்றும் அனைத்து ஆசிரியைகளும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆளினர்கள் மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு காவல் ஆளினர்களும் கலந்து கொண்டனர்