45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 8ம் தேதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது. 13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றது
ஆசிய விளையாட்டு தொடரில் இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்க பட்டியலில் 4 ம் இடத்தில் இந்திய அணி உள்ளது. 14-வது நாளான இன்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்றும் பதக்க வேட்டையை தொடர்ந்து நடத்தி பதக்கத்தில் சதமடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரஞ்சித் கவுர் ஆகியோர் அடங்
ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் அதில் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல கபடியிலும் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாக கிடைக்கும். எனவே மேலும் பல பதக்கங்கள் பெறும் நிலையில் இந்தியா உள்ளது.
ஆசிய விளையாட்டில் பதக்க பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகளின் விவரம் 1. .சீனா- 180 தங்கம், 99 வெள்ளி, 56 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் 335
.ஜப்பான்: 44 தங்கம், 55 வெள்ளி, 60 வெண்கலம்: மொத்த பதக்கங்கள்- 159 3.
தென்கொரியா: 33 தங்கம், 47 வெள்ளி, 77 வெண்கலம் 77 – மொத்த பதக்கங்கள்- 157 4.
இந்தியா: 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்: 87*
உஸ்பெஸ்கிதான்: 19 தங்கம், 16 வெள்ளி, 25 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்: 60 6.
சீன தைபே: 15 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம்- மொத்த பதக்கங்கள் 53 7.
வடகொரியா: 10 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் – மொத்த பதக்கங்கள்; 35 8.
தாய்லாந்து: 10 தங்கம், 14 வெள்ளி, 27 வெண்கலம்; மொத்த பதக்கங்கள் 51
பஹ்ரைன்; 10 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம்; மொத்த பதக்கங்கள் 17 10.
ஈரான்: 8 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம்: மொத்த பதக்கங்கள்; 43