உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கியது. முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையுடன் கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்தார். அதைத்தொடர்ந்து டாஸ் போடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோவும், டேவிட் மலானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
டேவிட் மலான் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு பதில் ரூட் வந்தார். இருவரும் சேர்ந்த நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். 11 ஓவர் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 32, ரூட் 6 ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ 33 ரன் எடுத்த நிலையில் பீல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை எடுத்தவர் சாண்ட்னர்.
13 ஓவர் முடிந்த நிலையில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்து 64 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவுக்கு பதில் ஹேரி புரூக் வந்தார்.