திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் உள்ள சாத்தூர்பாகம் கிராமத்தில் ரூ. 32.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர்,சிமெண்ட் சாலை,சுகாதார வளாகம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
புள்ளம்பாடி அருகே மால்வாய் ஊராட்சியில் உள்ள சாத்தூர்பாகம் கிராமத்தில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர் ,ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ. 6.50 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர்திருமதி ரசியா கோல்டன் ராஜேந்திரன்,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்,ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாலா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைகண்ணன்,ஒன்றிய கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ், வடிவேலு , மா.கண்ணனூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர்,மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.