அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே உள்ள ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் 14 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கு தொழில் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குறைபாடு உடைய பெண்கள் தொழில் பயிற்சி மேற்க் கொண்டு வருகின்றனர். இந்நிலையில்
அமெரிக்கா நாட்டில் வசிக்க கூடிய மருத்துவர் கேயன் வான் ராம்பே , ராபின் , வேர்லி ஆகியோர் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இதில் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்து பொங்கல் வைத்து கும்மி அடித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மேலும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.