திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் நடைபெற உள்ள கூட்டுறவு மற்றும் பாராளுமன்ற தேர்தலில்
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்களின் செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் மற்றும் அனைத்து மாவட்ட, மாநகரம், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.