சம்பா சாகுபடி அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு தேவையான 20 லட்சம் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து 31 சரக்குரயில் பெட்டிகள் மூலம் மயிலாடுதுறை வந்தடைந்தது. அவற்றை நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் கொண்டு சேர்த்தனர்.
