காஞ்சிபுரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மணிமாறன் ஏற்கனவே சோதனை நடத்தி வருவதாக உணவக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இருவர் சோதனையிட வந்துள்ளதாக மணிமாறனிடம் உணவக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிதாக வந்த 2 பேரிடமும் மணிமாறன் விசாரித்தபோது இருவரும் போலிகள் என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுவாஞ்சேரி அருகே கடை கடையாக சென்று ஓட்டல்களில் அபராதம் விதித்து வசூல் செய்த போலி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் , பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு பெண் மற்றும் இளைஞர் அதிகாரிகள் என கூறி சோதனையிட முயற்சி செய்துள்ளனர்.
