பாஜகவுடான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டில்லிக்கு அழைக்கப்பட்டார். அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன், கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்பட பலரை சந்தித்து அதிமுக கூட்டணி முறித்ததற்கான காரணம் குறித்து விசாரித்தனர். இது தொடர்பாக அண்ணாமலை தயாரித்து வைத்திருந்த அறிக்கையை கொடுத்தார். ஆனாலும் கட்சி மேலிடம் அண்ணாமலை நடவடிக்கையில் அதிருப்தி அடைந்ததாகவே தெரிகிறது.
அதிமுகவுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தும்படி அண்ணாமலையிடம் மேலிட தலைவர்கள் கூறி உள்ளனர். ஆனால் அண்ணாமலை அதை திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறியதாகவும் டில்லி வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
இதனால் என்ன செய்வது என்று பாஜக தீவிர ஆலோசனையில் உள்ளது. பாம்பும் சாகாமல், குச்சியும் ஒடியாமல் என்ன செய்ய முடியும்என ஒரு திட்டத்தை வகுப்பதா, அல்லது இரண்டில் ஒன்று என்ற முடிவை எடுப்பதா என ஆலோசித்து வருகிறார்கள். இரண்டொரு நாளில் இதற்கு ஒரு முடிவு கட்டப்படும் என தெரிகிறது.