2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர் உறுதியளித்தப்படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும், விவசாயிகளின் விலை பொருளுக்கு உரிய விலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த
வேண்டும், தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஐ.என்.டி.யூ.சி, ஐக்கிய விவசாயிகள் முன்னனி ஆகியோர் ஒன்றிணைந்து திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.