காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(46), கனடாவில் தங்கி இருந்தார். இவா் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த ஜூன் 18ம் தேதி நிஜ்ஜார் கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதனால் இருநாடுகளும் அதிரடியாக அங்கிருந்து தலா ஒரு தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
இந்த நிலையில் இப்போது இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை 10 நாட்களுக்குள் வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டு உள்ளது. 10 நாட்களுக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால் அவர்களுக்கான தூதரக சலுகைகள், அதிகாரங்கள் பறிக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா, கனடா இடையே மோதல் வலுத்து வருகிறது.