திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . மணச்சநல்லூரில் உள்ள காந்தி பூங்காவில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் திருஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மண ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் சமயபுரம் ஒன்றிய, நகர செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் இளைஞரணி அணியினர்,தகவல் தொழில்நுட்ப அணியினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.