அரியலூர் மாவட்ட இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் ராஜசேகரை கைது செய்ததை கண்டித்தும், பொய்யான வழக்குகளில் இந்து முன்னணியின் நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது திருச்சி -சிதம்பரம் சாலையில் இருந்து கோசம் எழுப்பியவாறே நான்கு ரோடு செல்ல முயற்சித்த இந்து முன்னணியினரை அங்கு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி 40 பேரையும் கைது செய்தனர்.