அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினமான மலேசியன் ராட்சத அணில்கள் கடத்தலை முற்றாக வேரறுக்கவும் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் ஐஏஎஸ் வழிகாட்டுதலின்படியும் திருச்சி மாவட்ட வன அலுவலர் G கிரண் உத்தரவு படியும் திருச்சி வனச் சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இக்குழுவினர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் (29) மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சேர்ந்த சாகுல் அமீது (28) ஆகியோரையும் அதிரடியாக கைது செய்தது. அணில்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை கிண்டி தேசிய பூங்காவில் இயங்கி வரும் வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது