அமெரிக்கா அருகே உள்ள நாடு மெக்சிகோ. இங்குள்ள தமவுலிபாஸ் என்ற மாநிலத்தில் சான்டாகுரூஸ் தேவாலயத்தில் இன்று ஞானஸ்நானம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஆலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் ஆலயத்திற்கு உள்ளேயே இறந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.