ஆந்திராவில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது. சோதனை நடைபெறும் இடங்களில் உள்ளூர் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்கள் வழக்குகளில் ஆஜரானவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.