ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சை, புதுகை, சிவகங்கை மாவட்டங்கள் அடங்கிய மண்டல ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். புதுகை கலெக்டர் கவிதா ராமு முன்னிலை வகித்தார். தாட்கோ மேலாண் இயக்குனர் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், தஞ்சை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், புதுகை எஸ்.பி. வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசு செய்து வரும் பணிகள், மற்றும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றம் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.