மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் 2 அரியவகை அணில்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் மலேசியாவை சேர்ந்த விஜயலட்சுமி என்பதும், அவர் கைப்பையில் மறைத்து அரிய வகை அணில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அதிகாரிகள் விசாரணையின் போது, ஒரு அணில் தப்பி ஓடியது. அதனை பிடிக்க முயன்ற ஒரு அலுவலரின் கையை அந்த அணில் கடித்ததால், உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.