பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றியும், யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது பற்றியும் அண்ணாமலை இன்று டில்லியில் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரின் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப சென்னையில் 3ஆம் தேதி நடைபெறும் பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசுவார் எனத் தெரிகிறது. அண்ணாமலையின் டில்லி பயணம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டில்லி பாஜ எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிய தமிழக பாஜக நிர்வாகிகள் இப்போதே ஆர்வமாக உள்ளனர். அண்ணாமலையுடன் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரும் டில்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக, பாமக, உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பது பற்றியும் ஆலோசனைகள் நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் பாரிவேந்தர், ஏசி சண்முகம், கிருஷ்ணசாமி, உள்ளிட்டோர் அதிமுகவையும், பாஜகவையும் மீண்டும் கூட்டணி சேர வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.