திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது. திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், திமுக தோன்றிய நாள் என முப்பெரும் விழாவை செப்டம்பர் மாதத்தில் கொண்டாடி வருகிறோம். திமுக என்பது தனது கொள்கைகளை பரப்ப பேச்சு, நாடகம், எழுத்துலகம், பாட்டு, கவிதை, கதை, நாடகம், நாளிதழ், வார இதழ், மாத இதழ் என அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது. முரசொலி பொங்கல் மலர் கருத்துகள் நிறைந்து இருக்கும்
மக்களை திசைதிருப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும். ஐடி விங்க்கின் பலரது பதிவுகளை ரசித்து படிப்பேன். குறைகளை கூறினால் தீர்க்கவும் முயற்சி செய்கிறேன். உங்களுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பாக நான் வலைதளத்தை பார்க்கிறேன். இந்த வலைதளங்கள் வாயிலாக நம் கொள்கைகளை கூற வேண்டும்.