திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட மாநகர தலைவர் துணைத் தலைவர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கை ரிக் ஷாவை ஒழித்தது, போக்குவரத்து துறையை அரசுடமையாக்கியது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் செய்தவர் கலைஞர். அந்த வகையில் அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கான அணியை நம்
முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார். அமைப்பு சார்ந்துள்ள ஓட்டுனர்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் அனைத்தும் விரைவில் அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கும் கிடைக்கும்.
விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளுடன் அடுத்த வாரம் ஆலோசித்து நீதிமன்ற தலையீடு இல்லாமல் என்ன பாதுகாப்பு வழங்க முடியுமோ அதை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சிறப்புரையாற்றினார் .