தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் நடந்தது. பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளை மேலாளர் ஏசுதாஸ் அறிவழகன் வரவேற்றார். சேர்மன் ஆறுமுகம் நிதி நிலை அறிக்கை வாசித்தார். பூண்டி புஷ்பம் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜேந்திரன் தீர்மானங்களை வாசித்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றார். கூட்டத்தில் இண்டர் நேஷனல் கார்ப்பரேட் வக்கீல் மகாராஜ், தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் உதவி இயக்குநர் குணசேகரன், ஓய்வு தேசிய நல்லாசிரியர் கலைச் செல்வன், லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள் செல்வராஜ்,
சம்பந்தம், ஆடிட்டர் சண்முகம், பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் தங்கராசு, எல்.ஐ.சி முன்னாள் மேலாளர் அக்னி உட்பட வாழ்த்தினர். இதில் பாபநாசம், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள், தமிழக நல்லாசிரியர் விருதுப் பெற்ற ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் ஷீல்டு, பரிசு வழங்கி கெளரவிக்கப் பட்டனர். இதில் இயக்குநர்கள் ராஜ நந்தினி, சேரலாதன், சுவாமி நாதன், நாச்சிமுத்து, வல்வில் ஓரி, பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகம்மது, விக்னேஷ், பாண்டியன், நவநீத கிருஷ்ணன், முத்தமிழ்ச் செல்வம், பிரபாகரன், கணேசன், தில்லைநாயகி, திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர். கிளை மேலாளர் அதியமான் நன்றி கூறினார்.