புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கான கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று லெம்பலக்குடி சென்று மகளிர் சுயஉதவிக்குழுவினரை சந்தித்து பேசி, அந்த கட்டிடத்திற்கான சாவியை குழுவினரிடம் வழங்கி, கட்டிடத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பொருளாதாரநிலையில் உயர்வுவடையும்படியும், முதல்வரின் எண்ணத்திற்கு ஏற்ப சிறப்பாக செயல்படும்படியும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதைத்தொடாந்து லெம்பலக்குடியில் தானியக்கிடங்கையும் திறந்து வைத்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.