திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர்.
அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டிநகரில் எம் எல் ஏ சின்னப்பா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நூலகம் கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த நூலகத்திற்கு தளவாட பொருட்கள் மற்றும் புத்தகங்கள் தேவை என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் டால்மியா சிமெண்ட் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் இயங்கி வரும் டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்,2 பெரிய வாசிப்பு மேஜைகள், 10 நாற்காலிகள் உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை சிமென்ட் ஆலையின் தலைவர் விநாயகமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் சுவாமிநாதனிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மாணிக்கவாசகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தகுமார் டால்மியா மூத்த மேலாளர் ரமேஷ்பாபு, பாரத் பவுண்டேஷன் மேலாளர் நாகராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.