Skip to content

ரூ.800 கோடி மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல்.. குஜராத் போலீஸ் அதிரடி…

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திதாம் துறைமுகத்தில் இருந்து 30 கிமீ தொலைவில், ராஜ்கோட் மாவட்டத்தில் மிதி ரோகர்
கட்ச் கிராமத்தின் கடற்கரையில் போதை பொருள் சிதறி கிடப்பதாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பாக்கெட்டுகளில் ஹெராயின் என்பதும் போதை பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதாவது, மொத்தமாக 80 பாக்கெட்டுகளில் ஒரு பாக்கெட்டுக்கு 1 கிலோ வீதம் சுமார் 80 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் கிடைத்துள்ளது. இதன் மத்திப்பு சுமார் 800 கோடி ரூபாய் இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது . பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் இந்த கட்ச் கடற்கரை பகுதியில் இவ்வாறு பல்வேறு முறை போதை பொருட்கள் கடத்தப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த போதை பொருட்கள் பறிமுதல் பற்றி,  காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், கிடைக்கப்பெற்ற போதை பொருட்களை யார் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. அது பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். பொதுவாகவே இதுமாதிரியான முறையில் தான் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது.

போதை பொருள் அனுப்புபவர் அதனை குறிப்பிட்ட இடங்களில் விட்டுவிட்டு செல்கிறார்கள். பின்னர் அதனை வாங்க வருவோருக்கு விட்டு சென்ற இடம் பற்றிய தகவல் தெரிவித்து விடுகின்றனர். இப்படித்தான் இந்த [போதை பொருள் பரிமாற்றம் நடக்கிறது. அதனால் தான் இப்போது இதனை யார் அனுப்பி இருப்பார்கள், யார் வாங்க வருவார்கள் என்ற விவரம் தெரியாமல் இருக்கிறது என கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ADS) மற்றும் உள்ளூர் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாவட்டத்தில் இதுபோன்ற பல சரக்குகளை கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம், BSF ஜகாவ் மரைன் போலீசாருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், சயாலி க்ரீக்கில் இருந்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 50 ஹெராயின் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் ஏடிஎஸ் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *