புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனான முடி கணக்கையும், பாத காணிக்கையும் செய்தும், அன்னதானம் வழங்கியும் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். மேலும் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி
கரூர் மாவட்ட மட்டுமல்லாது அருகில் உள்ள நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு போலீசார் சிசிடிவி கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்