தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை, பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், காது கேட்கும் கருவிகள் மற்றும் தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், பாபநாசம் எம்.எல்.ஏ. பி.ஏ ரிபாயி, திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலர் அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் பேரூராட்சி மன்றத்
தலைவர் பூங்குழலி, மனித நேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, நலத் துறை பணியாளர்கள் முருகேஸ்வரி, பத்ம தாரணி, மருத்துவர்கள் ஆர்த்தோ ரத்ன குமார், மன நலம் ஸ்ரீ பிரியங்கா, கண் வந்தனா, கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ், காது, மூக்கு, தொண்டை கவிதா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.