கோவை மாவட்டம், பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வடக்கு ஒன்றிய சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் தாங்கினார். இதில் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் 80 கர்ப்பிணி பெண்களும்,வடக்கு ஒன்றியம் சார்பில் 40 கர்ப்பிணி பெண்களும் என 120 பேர் பங்கேற்றனர்.
,இதில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழ் கலாச்சார முறையில் சேலை வளையல்,பழங்கள், ஊட்டசத்தான உணவு பொருட்கள் மற்றும் ஐந்து வகையான சாப்பாடுகள் பரிமாறப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் மருத்துவர் மூலம் குழந்தைகள் தற்போது உள்ள நிலை ஸ்கேன் எடுத்து பார்க்கவும், சத்தான உணவுகள் மற்றும்
மருந்துகள் உட்கொள்ளும் முறை மருத்துவர்கள் தெரியப்படுத்தினர். இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு மர கன்றுகள் வழங்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என கர்ப்பிணி பெண்களுகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் வழக்கறிஞர் அதிபதி , தமிழ்மணி, மு.க.முத்து நகரத் துணைச் செயலாளர் தர்மராஜ்,வடக்கு ஒன்றிய செயலளர் மருதவேல் மற்றும் வார்டு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.