அதிமுக கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் புதிய மாவட்ட கழக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் நியமித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று கழகப் பொதுச் செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் இன்று பெரம்பலூருக்கு வருகை தந்த போது மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல் பிளாஸாவில் வரவேற்பு அளிக்கப்பட்டு அதன் பின்பு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணா,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வரகூர்.அருணாச்சலம், நகர கழக செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.