கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம்பாளையம் அங்கம்மாள் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான திண்டுக்கல் க்கு சென்றிருந்துள்ளார். பின்னர் அவர் திரும்பி வருகையில் முன்புற கதவு உடைக்கப்பட்டு 10 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரிய வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் இலங்கை அகதிகள் மூவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் மதுரையைச் சேர்ந்த மாணிக்கவாசகம், ஈரோடு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த நாகேஸ்வரன், மதுரை கூத்தியார்குண்டு இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த திவாகர் மற்றும் புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், இலங்கை அகதிகள் மூவரையும் சென்னை புழல் சிறையிலும், ஒருவரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.