சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சை மாவட்ட செய்தியாளர் எஸ். அலெக்சாண்டர்(44) சிறுநீரக நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அலெக்சாண்டார் இயற்கை எய்தினார். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி சில்வர்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் நல்லடக்கம் நடைபெறுகிறது.அலெக்சாண்டருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். செய்தியாளர் அலெக்சாண்டரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு, இ-தமிழ் நியூஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.