Skip to content

நாளை கர்நாடகாவில் பந்த்… உதவி எண்கள் அறிவிப்பு…

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29ஆம் தேதி 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இது சம்மந்தமாக கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி,

தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளூர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து

பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கபடா வண்ணம் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயர்அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் இதர சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்துகொள்ள தொடர்பு அலுவலகமாக கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் தெடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் 9498170430, 94982 15407 என  டிஜிபி சங்கர் ஜுவால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *