Skip to content

பொம்மை பேட்டரியை விழுங்கிய 1 வயது குழந்தை…. காப்பாற்றிய திருச்சி ஜிஎச் டாக்டர்கள்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகளான ஒரு வயது குழந்தை – மின்சக்தி உடைய பொம்மைகளுக்கு போடும் பேட்டரியை 21ஆம் தேதி காலை விழுங்கிது.

இதனை அடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது – மேலும் உடனடியாக குழந்தையை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் உணவு குழாயில் பேட்டரி சிக்கி இருப்பது தெரியவந்தது – அது மின் சக்தி

கொண்ட பேட்டரி என்பதால் அது ஏற்படுத்தும் அரிப்பு காரணமாக குடல் ஓட்டை விழும் என்பதால் அதனை உடனடியாக எண்டோஸ்கோபி மூலம் எடுக்க திருச்சி அரசு மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

மேலும் ஒரு வயது குழந்தை என்பதால் மயக்க மருந்து நிபுணர்களின் உதவியுடன் 22 ஆம் எண்டோஸ்கோப்பி செய்து பேட்டரி அகற்றப்பட்டது.

தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது – தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது – ஒரு ரூபாய் நாணய வடிவில் இருந்த பேட்டரியை எண்டோஸ்கோபி செய்து பாதுகாப்பாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அகற்றினர்.

பொதுவாக குழந்தைகளுக்கு பேட்டரி போன்ற எலக்ட்ரிக் சார்ந்த சாதனங்கள் உள்ளடக்கிய பொம்மைகளை வாங்கி தருவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *