ஜமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு பெற்றது தொடர்பான செய்தியாளர்களுக்கு
கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுதின் அளித்த பேட்டியில்.. ஐமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால 4வது சுழற்சியின் போது மொத்த மதிப்பு 40க்கு 360 உயர்தரத்துடன் மதிப்பெண் பெற்றன்னோம் இம்மதிப்பீடு நல்வரியின் பாடத்திட்டம்:
கறுபித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு; ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கம், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்கள்; மாணவர்கள் ஆதரவு மற்றும் முன்னேற்றம்; நிர்வாகம் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் நிறுவன மதிப்புகள், முதலிய அம்சங்களின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிக்கான ஆய்வு தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட குழுவின் மூலம் செப்டம்பர் 20மற்றும் 21ம்தேதிகளில் நடைபெற்றது. இக்குழு கல்லூரியில் உள்ள அனைத்து துறை மற்றும் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு துறைகளின் சிறப்பம்சங்களை மாணவியர்களோடும்,கொண்டனர் அறிந்து மேலும், மாணவியரின் பெற்றோர்களோடும், முன்னாள் ஒரு மாணவர்களோடும், ஆசிரியன் மற்றும் ஆரிஹரரின் பணிவோடும் கல்லூரியின் பன்முகத்தன்மையைப் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த குழு ஆய்வின் போது கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். முன்னான மாணவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியதாக அமைந்திருந்தது.
இக்குழு ஆய்விற்கு கல்லூரியின் உள்தரகட்டமைப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவண்டி ஜார்ஜ் அமலரெத்தினம் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக வழிநடத்தினர்.
தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பால் நமது ஜமால் முகமது கல்லூரிக்கு “உயர்தரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தற்போது கல்லூரியில் முதுகலையில் 20 பாடப்பிரிவுகளும் இளங்கலையில் 25 பாடப்பிரிவுகளும் தற்போது பயிற்சிக்கு வருகிறது மேலும் புதிதாக இந்த ஆண்டு மூன்று புதிய பாடத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.
மாணவருடைய குற்றங்களை தடுக்கும் வகையில் வாரம் தோறும் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது அதன் காரணமாக கல்லூரியில் குற்றங்களும் தடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் எங்களது கல்லூரியில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் என பல்வேறு பெரும் ஆளுமை உள்ள மாணவர்களும் பயின்றுள்ளனர். இது கல்லூரிக்கு பெருமையாக கருதப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொருளாளர் வாஜி.ஜமால் முகமது,உதவிச்செயலர் முனைவர் அப்தில் சமீது, கௌரவ இயக்குநர் முனைவர் அப்துல் காதர்நிகால் மற்றும் கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன்.
ஆகியோர் உடன் இருந்தனர்.