திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக இளைஞரணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் 72திமுக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் மாநில திமுக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் மாநில திமுக இளைஞரணி துணை செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். அதன்படி 9 மண்டலங்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:
மண்டலம் 1ன் பொறுப்பாளர் எஸ். ஜோயல்
இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள் வருமாறு:
சென்னை கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, தென்மேற்கு(அந்தமான், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள்)
மண்டலம் 2-பொறுப்பாளர் அப்துல் மாலிக்‘ இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தியம், விழுப்பரம் வடக்கு, விழுப்பிரம் மத்தியம், கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு,
: மண்டலம் 3-பொறுப்பாளர் க.பிரபு. இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள் – காஞ்சிரபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, வேலூர் மேற்கு, வேலூர் மத்தியம், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, புதுச்சேரி.
மண்டலம் 4- பொறுப்பாளர் சீனிவாசன். இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள் தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் கிழக்கு, சேலும் மேற்கு, சேலும் மத்தியம், ஈரோடு வகடகு, ஈரோடு தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு.
மண்டலம் 5-பொறுப்பாளர் கே.இ. பிரகாஷ். இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள் நீலகரி, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கரூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு
மண்டலம் 6-பொறுப்பாளர் சி. ஆனந்தகுமார்‘ இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய மாவட்டம், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருவாரூர்.
மண்டலம் 7- பொறுப்பாளர் நா. இளையராஜா. இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள் தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய மாவட்டம், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகை வடக்கு, நாகை தெற்கு, காரைக்கால்.
மண்டலம் 8- பொறுப்பாளர் கு.பி. ராஜா என்கிற பிரதீப் ராஜா. இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள்- விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி தெற்க, தேனி வடக்கு, தேனி தெற்கு, சிவகங்கை , ராமநாதபுரம்.
மண்டலம் 9-பொறுப்பாளர் ரகுபதி என்கிற இன்பா ஏ.என். ரகு- இவரது பொறுப்பில் உள்ள மாவட்டங்கள் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, நெல்லை கிழக்கு, நெல்லை மத்திய மாவட்டம், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.