திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் – அக்கரைப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்பு உரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி ஜெயராணி இயற்கை வேளாண்மையில் வயல் தேர்வு, அங்கக
இடுபொருட்கள், பசுந்தாள், பசுந்தழை உரங்கள் குறித்து உரை ஆற்றினார். திருச்சி விதை சான்றளிப்பு துறை உதவி இயக்குநர் நளினி அங்கக சான்றளிப்பு குறித்து உரை ஆற்றினார். துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.