அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடைவீதியில் அடகு கடை நடத்தி வருபவர் வினித்குமார். இந்நிலையில் நேற்று வினித் குமார் அடகு கடையில் இருக்கும் போது அடையாளம் தெரியாத 2பெண்கள் வந்து 1 கிராமுக்கு எவ்வளவு கடன் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது போன் வந்ததும் வினித் குமார் சிறிது தள்ளி நின்று போன் பேசி கொண்டிருந்தார். அப்போது கல்லாவை எட்டிப் பார்த்த மர்ம பெண்கள் கல்லாவில் 500 ரூபாய் நோட்டு கட்டு 90,000 மற்றும் சில்லறை பணம் இருந்தது தெரியவந்தது.அதில் ரூ 90,000பணக்கட்டை
மட்டும் எடுத்த பெண்கள் மறைத்து வைத்துக் கொண்டுள்ளனர். உடனே அந்தப் பெண்கள் நாளைக்கு வருகிறோம் என்று கூறி சென்று விட்டனர். பின்னர் வினித் குமார் கல்லாப்பெட்டியை பார்த்த போதுரூ 90,000 பணம் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வினித் குமார் கொடுத்த புகாரின் பேரில் எஸ் ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து அடையாளம் தெரியாத 2 பெண்களையும் தேடி வந்தனர் இந்நிலையில் அடகு கடையில் இருந்து பணத்தைத் திருடிய சேலம் மேட்டூரை சேர்ந்த மீனாட்சி, மற்றும் மாரியம்மாள் ஆகியோர் அடகு கடையில் பணம் திருடியது தெரியவந்தது.இதனையடுத்து இவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில்