Skip to content
Home » துப்பாக்கி சுடுதல்…. இந்தியாவுக்கு 5வது தங்கம் வென்றார் சிப்ட் கவுர்

துப்பாக்கி சுடுதல்…. இந்தியாவுக்கு 5வது தங்கம் வென்றார் சிப்ட் கவுர்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சாம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *