Skip to content

போதிய சாலை வசதி இல்லை…. மழை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட அரசடிக்காடு என்னும் பகுதி மலையடிவாரப்பகுதியாகும்.அப்பகுதியில் விவசாயிகள் அவரவரது விவசாய நிலங்களில் வீடு கட்டி காட்டுப்பகுதியிலேயே ஆண்டாண்டு காலமாக வசித்துவருகின்றனர்.சுமார் 140 குடும்பங்கள் காட்டுப்பகுதிக்குள் வசித்துவருகின்றனர்.சாகுபடி செய்த வேளாண்பொருட்களை வாகனங்களில் அனுப்புவதற்கும், கறந்தபாலை பண்ணைக்கு எடுத்துச்செல்வதற்கும்,பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், நோயாளிகளை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்வதற்கும் போதுமான சாலை வசதி இல்லாமல் காட்டுக்கொட்டகை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அன்றாடம் சந்தித்துவருகின்றனர்.இதனால் அவர்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்து ஆளாளுக்கு இடம் விட்டு பாதை ஒதுக்கி பயணித்துவருகின்றனர்.மலைகாலங்களில் இந்த பாதை சேரும் சகதியுமாய்,பயணிக்க லாயக்கற்று இருந்துவருகிறது.இதனால் மீண்டும் அப்பகுதிவிவசாயிகள் சாலை வசதி அமைத்துதரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தனர்.இதனிடையே நாம் தானே செல்லப்போகிறோம் அதனால் நாமே நமக்கு சொந்தமான நிலங்களில் சாலைஅமைக்க இடம் விட்டுத்தருவோம் என்றெண்ணிய அப்பகுதிவிவசயிகள் ஒருமனதாய் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

அதனைஅடுத்து சுமார் 90 விவசாயிகள் அவர்களது நிலத்தில் சாலை அமைக்க தேவையான இடத்தை அரசுக்கு பத்திரம் எழுதி பதிவு செய்துகொடுத்துள்ளனர்.இந்த நிலையில் ஒருசிலர் ஆளும்கட்சி பிரமுகர்களின் தூண்டுதலின் பேரில் ஒருவர் மட்டும் சாலை அமைப்பதை தடுக்கும் நோக்கில் சாலை அமைக்க இடம் தராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாலை வசதி வரப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகள் விரக்தி அடைந்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், அப்பகுதி பொதுமக்கள் சாலையை விரைந்து அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கையின் படி, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் அரசடிக்காடு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.

இது குறித்து அப்பகுதி விவசாயி அருண்குமார் கூறும்போது, பல தலைமுறையின் கனவு இப்பகுதியில் சாலை அமைப்பது, அனைத்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அதற்கான பணி நடக்கும் நிலையில், திட்டமிட்டு,வேண்டுமென்றே ஒருசிலரின் தூண்டுதலாம் ஒருவர் மட்டும் பிர.சனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நா.கள் நூறு ஆண்டுகள் பின்னோக்கி போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். விவசாயிகளின் நலன் சார்ந்து தார்ச்சாலை அமைக்க முடிவெடுத்த நிலையில், ஒரு நபர் மட்டும், ஆளும்கட்சி பிரமுகர்களின் தூண்டுதலின் பேரில் முரண்பட்டு நிற்பதாக கூறும் பிற விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *