அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தேவாங்க நடுத்தெரு உய்ய கொண்டான் ஏரி பாலத்தின் ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளி சீருடையால் பரபரப்பு.
பாலத்தின் ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளிச் சீருடை ஆண்கள் பெண்கள் இருபாலர் அணியக்கூடிய புதிய பள்ளிச் சீருடைகளை யாரோ வீசி சென்றுள்ளனர்.
இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், வேதனையுடனும் பார்த்து செல்கின்றனர்.
உடுத்த துணி இல்லாத எத்தனையோ ஏழை எளிய மாணவர்கள் உள்ளனர் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அது போன்ற மாணவர்களிடம் அதனை வழங்கி இருந்தால் அவர்கள் உடுத்தி பயனடைந்திருப்பார்கள் ஆனால் அவ்வாறு செய்யாமல் யாரோ? ஆண்கள் மற்றும் பெண்கள் அணியக்கூடிய அரசு பள்ளி புதிய சீருடைகளை
எதற்காக சாக்கடையில் வீசி சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை’
பயன்பாட்டில் இல்லாமல் பள்ளியில் வைத்திருந்த பள்ளிச் சீருடைகளை தேவையில்லாமல் குப்பையாக இருப்பதாக நினைத்து சாக்கடை ஓரம் வீசப்பட்டிருக்கலாமா? சாக்கடை ஓரம் இரண்டு மூட்டை அரசு பள்ளி புதிய சீருடையால் பரபரப்பு ஏற்பட்டது.