Skip to content
Home » தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

  • by Senthil

சென்னை தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையர் முனைவர் பா.மூர்த்தி.   இவரது சொந்த ஊர்  திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி.  அங்கு தனது தந்தையின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினார்.  அப்போது  அவரது பெற்றோர் வாழ்ந்த  பூர்வீக வீட்டை  தந்தை பால்சாமி சேர்வை   நினைவாக பாலா படிப்பகமாக மாற்றினார்.

இந்த படிப்பகம் திங்கள் முதல் வெள்ளி வரை  மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். , சனி, ஞாயிறு கிழமைகளில் கூடுதலாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் செயல்படும்.  இந்த

நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், மற்றும் பொது அறிவு, அறிவியல், கணிதம், போட்டித்தேர்வுகள் தொடர்பான புத்தகங்கள்  இடம் பெறும்.

இதுகுறித்து  ஐபிஎஸ் அதிகாரி பா.மூர்த்தி கூறியதாவது:

. எம் சிந்தையில் நிலைத்து நின்று எம்மை என்றும் வழிநடத்தும் எம் தந்தையின் நினைவுநாளில் தமக்குகிடைத்திடாத கல்விச்செல்வத்தை யாவர்க்கும்அளிப்பதை தம்சிந்தையில் நிறுத்தி நின்றவர் எம்தந்தை  அவர்தம்செயலை மேலும் முன்னெடுக்கும் முயற்சியாய் பாலாபடிப்பகம் என்றதொரு  வாசிப்பு சாலையை எம்பெற்றோர் கட்டி வாழ்ந்தவீட்டை புனரமைத்து அதில் நிறுவியிருக்கிறோம்.

எம்மூரையும்அதனைச்சுற்றியுள்ள ஊர்களையும் சேர்ந்த இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு ப்படிக்கதேவையான நூல்கள்,,சிறுபிள்ளைகள்வாசிக்க குழந்தைப் புத்தகங்கள்,பெரியவர்கள் வாசிக்க

பொதுநூல்கள் எனபாலாபடிப்பகம் நிறைந்துநிற்கும் . ஊர்ப்பிள்ளைகள் தம்வீட்டுப்பாடங்களை படிக்க உதவும் பொருட்டு அவர்களை வழிநடத்த ஊக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரேநூலகராகவும்செயல்படுவார். பல்லோர் பயன்பெற உருவாக்கப்பட்டுள்ள பாலா படிப்பகம்  திண்டுக்கல் உதயா லயன்ஸ்கிளப், துளிர் நண்பர்கள் அமைப்பு ,ஜிடிஎன் கல்விக்குழுமம் ஆகியோரின் சீரிய முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அரும்பாடுபட்ட அனைவருக்கும்,குறிப்பாக அன்பு சகோதரர் பொறிஞர் நல்.நாகராஜன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாலாபடிப்பகம் யாவர்க்கும் உதவிநிற்கட்டும், அதைப்பயன்படுத்திஉயர்க.
விரும்புவோர் நூல்களை பாலாபடிப்பகம்,தெற்குதெரு,வக்கம்பட்டி ,நி.பஞ்சம்பட்டி அஞ்சல் ,திண்டுக்கல்-624303 என்றமுகவரிக்கு படிப்பகத்திற்கு அனுப்பி மகிழுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!